WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

விழுதல் என்பது ஏழுகையே.... 25எழுத்தாளர்கள் எழுதும் பெருந் தொடர் கதை

பகுதி 18-19 விக்கி நவரட்ணம்

விழுதல் என்பது ஏழுகையே.... 25எழுத்தாளர்கள் எழுதும் பெருந் தொடர் கதை

விழுதல் என்பது எழுகையே ...............

பகுதி 18 - 19 எழுதியவர்:  திரு. விக்கி நவரட்ணம் - சுவீஸ்

எழுத்தாளர் அறிமுகம் 
சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம்

யாழ் வண்ணார்பண்ணை பிறப்பிடமாகும். 

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை வாழ்வோடு இணைந்த இடமாகும்.

வண்ணார்பண்ணை  செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் பாடசாலையில் ஆரம்ப கல்வி. பயின்று, 
யாழ் மத்திய கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர்.

கொழும்பில் தனியார் தறையிலும், பின்னர், யாழ் மாநரகசபையிலும் பதவி வகித்தவர். 

யாழ் மண்ணிலேயே சிறந்த மேடைப் பேச்சாளனாக அறிமுகப் படுத்தப்பட்டவர். 

கல்வி பயின்ற காலத்தில் இயல்பாகவே கவிதை, கதைகள் எழுதுவதில் நாட்டமிருந்தாலும், புலம்பெயர் மண் புடம் போட வைத்தது. 

இவரின் இலக்கியப் பணிகள் செயற்திறன் பெற்றபோது இவரின் கவிதைகளுக்கு பிரான்ஸ் ஏ.பி.சி. வானொலி தளம் அமைத்துக் கொடுத்தது. 

2002ம் ஆண்டு சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் ஏ. பி. .சி. வானொலி நடாத்திய "தேன் மதுர மாலை" கலை விழாவில் இவருடைய முதல் வெளியீடான "ஆகாய கங்கை" என்ற கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது. 

2003ம் ஆண்டு Nஐர்மனி "கம்" மானிலத்தில் "ஆகாய கங்கை" கவிதைத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 

இலக்கியப் பணியில் இவரின் எண்ணங்கள் ராட்ஸச உணர்வுகளாக எழுந்து துள்ளிய துள்ளல்கள் கதைகளாக பிறப்பெடுத்தபோது உலகளாவிய ரீதியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. 1994ம் ஆண்டு சுவிஸ் தமிழர் கலாச்சார ஒன்றியம் நடாத்திய சிறு கதைப் போட்டியில் முதலாம் பரிசைப் பெற்றார். 

1995ம் ஆண்டும், 1997ம் ஆண்டும்  இவர்கள் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றார். 

"காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்" என்ற ஓர் ஆவணத் தொகுப்பு 2005ம் ஆண்டு பிரான்சில் வெளிடப்பட்டது. அந்த ஆவணத் தொகுப்பில் திரு. விக்கி நவரட்ணம் அவர்களையும் இணைத்துக் கொள்ளப்பட்டது காலம் தாங்கும் வரலாற்றுச் சிறப்பாகும.; 

இவருடைய இலக்கியப் பணியை பாராட்டு முகமாக பிரான்ஸ் நாட்டின் "ஏவ்றி கலாமன்றத்தின்" ப

இவர் ஓர் சிறந்த நாடகக் கலைஞர் என்பது பலருக்கு தெரியாத உண்மை. தானே நடித்து இயக்கிய பண்டாரவன்னியன் நாடகம் இவரின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கூறலாம்.

இவரின் இயற் பெயர் விக்கினேஸ்வரமூர்த்தியாக இருந்தாலும் தன் தந்தைமேல் உள்ள பாசத்தால் நவரட்ணம் என்ற தந்தையின் பெயரையும் இணைத்து இலக்கிய உலகில் விக்கி நவரட்ணம் என்ற பெயருடன் வலம் வருகின்றார். இவருடைய இலக்கியப்பணி மேன்மேலும் தொடரவும், நல்ல புகழோடு வாழவும், வாழ்த்துவோம் 

தகவல் அறிமுகம் வி.எ.எ குழுமம்
திரு.இக.கிருட்ணமூர்த்தி 
திரு.ஏலையா முருகதாசன்


விழுதல் என்பது எழுகையே ...............

 பகுதி  19 எழுதியவர்: சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம் 

தொடர்கிறது 19

¨ஹொணிலாண்ட்¨ சென்ற சிறிது நேரத்தில் டேவிட் அங்கிளுடைய மனைவி, ரொசி அன்ரி, பிள்ளைகள் லின்ரா, யஸ்மின், சகோதரி மெற்றில்டா அன்ரி, கணவர் அன்ரன், பிள்ளைகள் றொபின், nஐரால்ட் அனைவரும் என்னுடன் பழகிய விதத்தால்  தங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டார்கள்.

இருந்தாலும் ஒரேயொரு கவலை என் மனதை வாட்டியது. அன்ரன் அங்கிள் ஒற்றை கையில் ஊன்று தடியுடன் நடப்பதற்கு சிறிது கஸ்ரப்பட்டப்படியே நடந்தார். போகும்போது டேவிட் அங்கிளிடம் அதைப்பற்றி கேட்போம் என்ற எண்ணத்துடன் பொழுது போவதே தெரியாமல் அவர்களோடு சந்தோசமாக கழித்தேன்.

அங்கிருந்து புறப்பட்டு றெஸ்ரோறன்ரில் இரவு உணவை உண்டபின் காரில் வரும்போது அன்ரன் அங்கிளைப்பற்றி டேவிட் அங்கிளிடம் கேட்டேன்.

அன்ரன் ஒரு ¨ஸ்ரீல் பக்ரறி¨யில் மெசினிஸ்ராக வேலை செய்கிறார். ஒன்பது மாதத்திற்கு முதல் மெசின் பழுதடைந்து ¨ஸ்ரீல் பார்¨ ஒன்று உடைந்து இடுப்பில் பலமாக அடித்ததால் இடுப்பில் தசை நசிந்து விட்டது என்று டாக்ரர்கள் சொல்கிறார்கள். மாதத்தில் நான்கு முறை தெரப்பிக்கு போய்வருவார். அவரால் தொடர்ந்து அதிகநேரம் நடக்க முடியாது, அதிகநேரம் நின்றும் வேலை செய்ய முடியாது. அவருடைய இ;ன்சூரன்ஸ் தான் எல்லாமே செய்கிறார்கள்.

வருகிற பாடசாலை விடுமுறையில் மெற்றில்டா அவரைக் கூட்டிக்கொண்டு தமிழ்நாட்டிற்கு போய் இரண்டு மாதம் கோவையில், அல்லது கேரளாவில் ஆயுர்வேத வைத்தியம் செய்து பாப்பம் என்று தீர்மானிச்சிருக்கிறார்.

¨அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன்¨ இருக்கும் இந்த நவீன மருத்துவ காலத்திலும் அவருடைய தசை நசிவுக்கு சரியான மருத்துவம் செய்ய முடியவில்லை, ஆயுர்வேதத்தையாவது செய்து பார்ப்பம் என்ற மெற்றில்டாவின் நம்பிக்கை அது!

அதுவும் ஓரளவில் சாத்தியப்படலாம். அந்தக் காலத்தில் 23 மி. மீற்றர் கருப்பையையும், அந்தக் கருப்பையில் ஐந்தாம் மாதம் காது, மூக்கு, உதடும், ஏழாம் மாதம் தலைமுடி வளரும் என ஒவ்வொரு நாளும் கருப்பையின் வளர்ச்சியை கணக்கிட்டு வைத்தவர்கள் சித்தர்கள்.

1700ம் ஆண்டில் கால்நடையாகவும், குதிரையிலும் உலகின் பல பாகங்களுக்கு சென்று ஏராளமான தாவரங்களை பதிவு செய்த சுவீடன் நாட்டு நவீன தாவரவியல் தந்தை ¨கார்ல் லின்னேயஸ்¨ என்பவருக்கு வரலாற்றில் தந்திருக்கும் மரியாதை, எங்கள் தமிழ் சித்தர்களுக்கில்லையே! அன்று அவர்கள் எழுதி வைத்த ஏடுகளில் அனேகமானவையை ஐரோப்பிய நாடுகள் கவர்ந்து வந்து இன்றும் Nஐர்மனியில் அதை பாதுகாப்பாக பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை சில வருடங்ளுக்கு முன் பத்திரிகையில் படித்த ஞாபகம்.

இறைவனின் அருளிருந்தால் மெற்றில்டாவின் விருப்பம் நிறைவேறும் என்று கூறி முடிக்கையில் எனது முகாமிற்கு முன்னால் கார் நின்றது.

¨நாளை காலை எட்டு மணிக்கு வருவேன் தயாராயிரும் சீலன்¨ என்று கூறி விடைபெற்றபோது! எல்லோருமே அன்போடு கைகளை அசைத்து விடைபெற்றார்கள்.

அவர்கள் என் கண்களில் இருந்து மறைந்ததும் முகாமிற்குள்ளே போவதற்கு திரும்பியபோது உள்ளே நின்ற விறுமாண்டி என்னைப் பார்த்து உனக்கு இவ்வளவு பெரிய குடும்ப உறவா? இரண்டு காரில் வந்த அனைவரும் இங்கு எங்கே? இருக்கிறாhர்கள் என்று ஆச்சரியமாகக் கேட்டான். 

எதிர்பாராமல் கிடைத்த அன்புள்ளங்களை உறவில்லையென சொல்லமனமின்றி ஆமென்று தலையாட்டிவிட்டு எனதறைக்குள் சென்றேன்.

எனக்குள் சந்தோசம் துள்ளி விளையாடியது. விழுதல் என்பது எழுதலுக்காகத் தான் என்பதை ஆண்டவன் டேவிட் அங்கிள் ரூபத்தில் உதவி புரிகிறார் என்ற எண்ணத்தோடு படுக்கையில் விழுந்தேன்.

எட்டு மணிக்கு என்னை அழைத்துச் செல்வதற்கு டேவிட் அங்கிள் வருவார் என்பதால் நித்திரைக்கு விடைகொடுத்து குளித்துவிட்டு முகாம் வாசலில் அவருக்காக காத்து நின்றேன்.

சரியாக எட்டு மணிக்கு வந்த டேவிட் அங்கிள்; சூரிச் மக்டொனால்;;சிற்கு அழைத்துச் சென்று டானியலிடம் என்னை அறிமுகம் செய்தவர், சற்றுத் தூரத்திலுள்ள றெஸ்ரோறன்ரில் இருப்பதாகவும் அங்கே வரும்படியும் கூறிவிட்டு சென்றார்.

டானியல் மக்டொனால்;சிற்;கு மேலே உள்ள அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று என்னிடம் டொச் மொழியில் விபரங்களை கேட்டுத் தெரிந்து, விண்ப்பப்படிவத்தை நிரப்பி, என்னிடம் போட்டோவை பெற்றுக்கொண்டதும் விண்ணப்பப்படிவத்தில் கையெழுத்திடும்படி கூறினார்.

கையெழுத்திட்டதும் தற்போது உமக்கு எண்பது வீதம்தான் வேலைக்கு பதிந்திருக்கு, மூன்று நாட்களுக்கு தினமும் இரண்டு மணித்தியாலம் வேலை பழக்குவார்கள். மூன்று மாதம் முடிந்ததும் நூறு வீதமாக்குவோம். அதன் பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கும்போது உமக்கு உதவி மனேஐருக்கான வேலை உயர்வு தர முயற்ச்;சிப்போம். வேலை செய்து கொண்டு மொழியை படிக்க முயற்ச்சித்தால் இங்கு உமக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

ஆறு மாதங்களின் பின்னர் உமக்கு பதின் மூன்றாவது மாதச்சம்பளம் ஐம்பது வீதம் கிடைக்கும். ஒரு வருடத்தின் பின்னர் பதின்மூன்றாது மாதச்சம்பளம் நூறு வீதமாகும். ஆறு மாதத்தின் பின்னர் உமது முயற்ச்சியைப் பார்த்து உரிமையாளரிடம் பேசி மொழியை படிக்கும் செலவை நாமே பொறுப்பேற்போம் என்ற விபரங்களையும் கூறினார்.

பின்னர் என்னை கீழே அழைத்து வந்து றெஸ்ரோறன்; மனேஐருக்கும், அங்குவேலை செய்பவர்களுக்கும் அறிமுகப்படுத்தியபின், சாப்பாட்டறை, உடைமாற்றும் அறையென எல்லாவற்றையும் காட்டியதும், நான் அணியவேண்டிய உடைகள் இரண்டு Nஐhடியை தந்து மறுநாள் காலை பத்து மணிக்கு வரும்படி கூறியவர் எனது கரத்துடன் கரமிணைத்து விடைபெற்றார். 

விடைபெற்று வெளியே வந்தபின் டேவிட் அங்கிள் காத்திருந்த றெஸ்ரோறன்;றுக்குள் சென்றபோது! மேiஐயில் இருந்தபடியே அருகே இருந்த இருக்கையில் அமரும்படி எனக்கு ஐhடை காட்டி இருவருக்கும் ¨கபே ஓடர்¨பண்ணிவிட்டு நடந்தவற்றை விபரமாக கேட்டு தெரிந்து கொண்டவர், என்னைப் பார்த்து, ¨சீலன் இன்றைக்குதான் உம்முடைய முகத்தில் சந்தோசத்தை காணுறன்.¨

¨அங்கிள் உங்களை சந்திக்கிறதுக்கு முதல் எனக்கு வேலை கிடைக்கவேணும், எனது கடன் பிரச்சினைகளை தீர்க்கவேணும், என்றாவது ஒருநாள் பத்மகலாவோடு மக்டொனால்;சில் இருந்து சாப்பிடவேணுமென்று மனக்கனவு கண்டனான்.¨

¨எனக்கு மக்டொனால்சிலேயே வேலை கிடைச்சிருப்பதை என்பதை நினைச்சு பார்க்கவே முடியவில்லை. உங்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.¨

¨என்னவோ தெரியவில்லை சீலன், முதல் நாள் என்னுடைய காரில் வரும்போது நீர் கவலையோடு சொன்ன உமது கடன் பிரச்சினை, உமது பல்கலைக்கழக படிப்பை தொடரமுடியாதது மட்டுமல்ல, உமது காதலி பத்மகலாவைப் பற்றி சொன்னதும் என் மனதிற்கு மனவேதனை ஏற்பட்டதால் உமக்கு உதவி செய்ய என் மனம் எண்ணியது.¨

சீலன்! கவலை இல்லாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. ஆனால், அதை எதிர்கொள்வதில் தான் ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வி, துயரம், நிம்மதி எல்லாமே இருக்கிறது. அதைத்தாமே எதிர்த்து முன்னின்று போராடுபவர்கள் ஒரு சிலர் தான்.

எதி;ர்காற்றில் மிதிக்கும் மிதிவண்டி போலவே மனிதனின் வாழ்கை ஒரு போராட்டமாகும். இனிமேல் உம்முடைய முயற்ச்சியில் தான் எல்லாமே தங்கியிருக்கு. முகாமில் இருந்து ஒவ்வொருநாளும் சூரிச் வந்து போவதென்றால் கொஞ்சம் கஸ்ரமாகத் தான் இருக்கும்.

உமக்கு வேலை கிடைத்த பின்னர் முகாமில் தங்கியிருக்க முடியாது என்பதால், தற்காலிகமாக தவராசாவுடன் தங்கியிருந்து கொண்டு வசதியாக ஒரு சின்ன அறை எடுத்தபின்னர் எல்லாம் நன்மையாக அமையும். 

இனிமேல் தான் சீலன் நீர் தனியே எடுத்து வைக்கும் காலடி ஒவ்வொன்றும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும். மனிதர்களுள் பொல்லாக் குணமுடைய மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு உமது பாதையில் நீர் பயணிக்கவேணும். முப்பது வருடங்களுக்கு மேல் ஐரோப்பாவில் தமிழர் இங்குள்ள சூழலுக்கேற்றவாறு வாழப்பழகிக் கொண்டார்கள். வெள்ளைக்காரன் கை குலுக்கும் போது சாதி பார்ப்பதில்லை. இங்குள்ள தமிழர்கள் வெள்ளைக்காரரோடு பழகியும், பணிபுரிந்து கொண்டும் இன்னும் சாதிக்கு கொள்ளி வைக்கிறார்களில்லை. இங்கு வளரும் தலைமுறையினருக்கும் எண்ணை ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 

அடுத்தது உமது வருமானம், உமக்கு கையில் பணம் வைத்து செலவு செய்து பழக்கமில்லை. இனி கிடைக்கப்போகும் சம்பளம் மிகப்பெரிய தொகையாக உமக்கு தோன்றக்கூடும.; கண்டதையும் வாங்கி கணக்கின்றி செலவு செய்யாமல், அளவோடு செலவு செய்து கொள்;ளும். உம்முடைய உணவு, உறைவிடம், தேவையான உடைபோக மிகுதியை சேமித்து உமது கடனைத் தீர்க்கப் பாரும்.

துணிவும், தன்நம்பிக்கையுமே உமது வாழ்கைக்கு வழிகாட்டியாக இருக்கும். பொறுமை, அடக்கம் உம்மிடம் உண்டு. இதையே தொடர்ந்து நீர் கடைப்பிடித்தால் அறிவியல் என்னும் வானத்தை ஆளும்; சுகம் உமக்கு கிடைக்கும். உண்மை, நேர்மை உமது உள்ளத்தில் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும்

இவை தான் சீலன் உமக்கு என்னால் கூறக்கூடிய புத்திமதிகள் என்றவர், மேசையில் கபேக்குரிய பணத்தை வைத்துவிட்டு என்னை அழைத்துக்கொண்டு வெளியேறி, காரில் ஏற்றிக்கொண்டு முகாம் நோக்கி புறப்பட்டார்.

நேற்றுடன் எனது விடுமுறை முடிவுற்றது. உமக்காகத்தான் இன்று நின்றேன். பின்னேரம் எனது குடும்பத்துடன் nஐனிவாவுக்கு போயிடுவன். திரும்ப எனக்கு சூரிச் வர சந்தர்ப்பம் கிடைச்சால் உம்மிடம் வருவேன். அப்போது உம்மை நல்ல நிலையில் பார்க்கவேணும் என்று என்று கூறியவாறு வந்தவர் முகாம் வாசலில் காரை நிறுத்தினார்.

காருக்குள் இருந்தவாறு கைகுலுக்கி சிறிய ¨என்பலப்¨ ஒன்றை  எனது சேட்டுப் பையில் திணித்து, இது எனது சிறிய அன்பளிப்பு என்றவர், காரை இயங்க வைத்து என்னிடமிருந்து விடைபெறும்போது!

¨அங்கிள்! அன்ரி, மெற்றில்டா அன்ரி எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்கோ.¨

¨கட்டாயம் சொல்லுவேன்¨ என்றபடி காரை நகர்த்தினார்.
    
இருளில் மூழ்கியி;ருந்த எனக்கு பரிவு, பாசத்துடன் ஒளியேற்றியவர் என்னை விட்டு பிரிவதை பார்த்துக் கொண்டு நின்ற என் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. 

அவர்; என்னிடம் தந்த "என்பலப்பை" பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் ஆயிரம் சுவிஸ் பிராங்குகளும், சிறிய கடிதமும், அத்துடன் "விசிற்றிங் காட்டும்" இருந்தது.

கடிதத்தை பிரித்தபோது, சீலன் இந்தப் பணத்தை கையில் தந்திருந்தால் நீர் ஏற்றிருக்கமாட்டீர். தந்ததன் காரணம் நீர் முகாமை விட்டு வெளியேறினால் உமக்கு தொலைபேசி வசதியிருக்காது. இந்தப் பணத்தில் சிறிய கைத்தொலைபேசியை வாங்கவும். மிகுதியை சம்பளம் கிடைக்கும்வரை உமது வேலைக்கு சென்றுவருவதற்கான செலவுக்கு வைத்திரும்.

தொலைபேசி வேண்டியதும் பத்மகலாவுடன் உடனடியாக தொடர்பு கொண்டு, உமக்கு வேலை கிடைத்ததைப் பற்றி தெரிவியும். முடிந்தால் என்னுடைய தொலைபேசி  இலக்கத்திற்கு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்பு கொண்டு உமது சுகத்தை தெரிவிக்கவும்.
                                                         அன்புடன்
                                                       டேவிட் அங்கிள்

கடிதத்தை மடித்து வைத்துவிட்டு அவருடைய பெருந்தன்மையை நினைத்து மிக மிக சந்தோசத்துடன், எனக்கு வேலை கிடைத்ததை தவமண்ணைக்கு சொல்ல வேண்டுமென்ற ஆவலுடன் முகாமுக்குள் சென்றேன்.

தொடரும் 20
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------கதை தொடர்கிறது பகுதி 18

என் கண்களில் ஒளியானவளே
என் இதயத்தின் துடிப்பானவளே
என் உயிருக்குள் உயிராக
ஒளிந்து கொண்ட என் கலாவே

காத்திருக்கிறேன் எனக்காக என்று இறுதியாக பத்மகலா சொன்ன வார்த்தை பஸ்சிற்காக காத்திருக்கும் அந்த வேளையிலும் சீலனின் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்நேரத்தில் சீலன் நின்ற பஸ் தரிப்பை தாண்டிச் சென்ற ஓர் காரொன்று சற்றுத் தூரம் சென்றதும்,  நின்று பின் பக்கமாக சீலன் நிற்கும் இடத்தை நோக்கி வந்து அவனருகே நின்றது. காருக்குள் இருந்தவர் காரின் கண்ணாடியைத் திறந்து ¨எங்கே போகிறீர் என்று ஆங்கிலத்தில் கேட்டார்.¨

¨¨நான் போகுமிடத்தை அவரிடம் கூறினேன்.¨

முன் கதவை எட்டி திறந்தவர் தன்னருகே முன்னிருக்கையில் அமரும்படி கண்களால் சைகை செய்தார். அறுபது வயதிற்குள் மதிக்கத் தக்க அவருடைய பெருந்தன்மைக்கு தலைசாய்த்து காருக்குள் ஏறி அமர்ந்தேன். மெல்லியதாக தமிழ்ப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எனவே அவர் தமிழர் என்பதால் அவரைப் பார்த்து ¨அங்கிள் நீங்கள் சூரிச்சிலா இருக்கிறீங்கள்?¨

¨இல்லை தம்பி நான் nஐனிவாவில் இருக்கிறேன். இங்கே ஹஹகன்ரொன் அர்ரோவில்ஹஹ வசிக்கின்ற எனது சகோதரியின் வீட்டிற்கு ஒரு கிழமை விடுமுறையில் எனது மனைவி, பிள்ளைகளுடன் வந்து தங்கி நிற்கிறேன்.¨

அவருடைய பேச்சு, தோரணை எல்லாமே நல்ல குணவியல்புகளுடன் வசதியாக வாழ்பவராகத் தெரிந்தது. அவர் என்னைப்பற்றி விசாரித்தபோது! சிறிதும் தயக்கமில்லாமல், தற்போது நான் வாழும் வாழ்கையைப் பற்றியும், எனது கடந்த கால வாழ்கையைப்பற்றியும் விபரமாக கூறி முடியும் நேரம் நான் தங்கியிருந்த முகாமின் வாசலுக்கு வந்து விட்டதால் வாகனத்தை நிற்பாட்டினார்.

நன்றியைக் கூறி இறங்குவதற்கு எத்தனித்தபோது ஓர் சிறிய தாளில் தற்போது தான் தங்கியிருக்கும் சகோதரியின் விலாசத்தை எழுதித் தந்தவர், ¨சீலன் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை முழுநேரமும் தங்கச்சி வீட்டில் இருப்பேன். முடிந்தால் என்னை நாளைக்கு வந்து சந்தியும் எனக் கூறி விலாசத்தைத் தந்தவர், ¨றெயினில் வரக்கூடிய வசயிருக்கா?¨ எனக் கேட்டவர் ஐம்பது சுவிஸ் பிராங்கை எடுத்து என்னிடம் தர முற்பட்டார்.

¨இல்லை அங்கிள் நீங்கள் காட்டும் இவ்வளவு அன்பே போதும், நாளைக்கு காலை பத்து மணிக்கு உங்களிடம் வருவேன்¨ என்று கூறிக்கொண்டே நன்றியுடன் அந்தக் கனிவான முகத்தை பார்த்தபடியே விடைபெற்றேன்.

எதிர்பாராத ஒரு நல்ல உள்ளத்தை சந்தித்த சந்தோசத்தில் என்னால் அவருடைய பெயரை தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையுடன் அவர் தந்த விலாசத்தை பார்த்தபோது, விலாசத்தின் கீழே டேவிட் என்று எழுதியிருந்ததை கவனித்தேன்.

கிறிஸ்தவராக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் முகாமில் எனது அறைக்குச் சென்று காலையில் நேரத்திற்கு எழும்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் படுக்கையில் விழுந்தேன்.

அப்போது நேரம் அதிகாலை நாலு மணிதான். பொதுவாகவே மனிதன் ஆழ்ந்து தூங்கும் நேரம். அந்த மாதிரி தூக்கத்திற்கு சீலன் விடைகொடுத்து பல மாதங்களாகின்றன. நேற்றைய இரவு சந்தித்த டேவிட் அங்கிளின் பரிவுக்குள் மூழ்கிக்கிடந்த சீலனுக்கு அவனுடைய கைக்கடிகாரம் ஆறமணி என்பதை அறிவித்தது.

நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவன் இரு கைகளையும் மேலே உயர்த்தி சோம்பலை முறித்துவிட்டு பல் தேய்த்து முகம் கழுவி, தேனிரை தயாரித்து பருகியதும், டேவிட் அங்கிளிடம் போவதற்கு தயாரானான்.

இப்போது தனக்கு தெரிந்த டொச் மொழியின் உதவியுடன் விசாரித்து போகமுடியும் என்ற நம்பிக்கையில் சூரிச் தொடருந்து நிலையத்தில் ¨அர்ரோ¨விற்கான தொடருந்தில் ஏறி ¨அர்ரோ¨ தொடருந்து நிலையத்தை அடைந்தான். முன்பக்கமாக வீதிக்கு வந்தவன், டேவிட் அங்கிள் நேற்று இரவு கூறியது போல் நேராக சென்று மூன்றாவது சந்தியில் இடப்பக்கமாகத் திரும்பி சிறிது தூரம் சென்றதும், விலாசத்திற்குரிய வீட்டின் முன்னால் நின்றான்.

சுற்றிவர நிலப்பரப்புள்ள வீடாக இருந்தது. வெளிக்கதவைத் திறந்து உள்ளே போவதற்கு எத்தனித்தபோது! அவனுக்காக காத்திருந்தவர் போல் கதவைத் திறந்து ¨உள்ளே வாரும் தம்பி¨ என்ற குரல் வந்த பக்கம் திரும்பி பார்த்தபோது, ¨கார் கராஐpல்¨ இருந்து வெளியே வந்த டேவிட் சீலனை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

இருக்கையில் அமரும்படி கூறியவர், தனது மனைவி, பிள்ளைகள், சகோதரி, சகோதரியின் கணவர், அவர்களின் பிள்ளைகளோடு அனைவரையும் அறிமுகம் செய்தபோது அனைவரும் சிரித்தமுகத்தோடு கைகொடுத்து என்னை வரவேற்றார்கள். 
 
முன் ஹோலில் மாதாவின் சிலையை வண்ண விளக்குகளால் அழகுபடுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் உள்ளே சென்றபின், என்னைப்பார்த்து ¨சீலன் கூல்ரிங்ஸ்¨ அல்லது? ¨கபே¨ குடிப்பீரா என்றபோது இல்லை அங்கிள் ¨கூல்ரிங்சே¨ போதும் என்றவாறு இருக்கையில் அமர்ந்தேன்.

அதற்குள் மகள், தகப்பனுக்கும் சேர்த்து ஆளுக்கோhர் அழகான கண்ணாடி தம்ளர்களில் பழச்சாறை எடுத்து வரவே ஒன்றை எடுத்து என்னிடம் தந்துவிட்டு அடுத்ததை தானும் எடுத்து பருகியபடி, ¨தம்பி சீலன் இன்றைக்கு மத்தியானம் எங்களுடன் தான் லஞ்ச் எடுக்கவேணும்.¨

அப்படி அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியாமல் தலையசைத்துவிட்டு மௌனமாக இருந்தேன்.

¨என்ன தம்பி ஒன்றுமே கதைக்காமல் இருக்கிறீர், கவலைகள் மனசுக்குள் இருந்தால் அதைக் கொஞ்சம் தூக்கிப் போடும். உம்மைப் போல் தான் நானும் ¨தரப்படுத்த¨லால் பாதிக்கப்பட்டு எழுபத்து நான்காம் ஆண்டே பிரான்ஸ்சிற்கு வந்து ஆறுமாதம் தங்கியிருந்த பின் nஐனிவாவிற்கு வந்து சேர்ந்தேன்.¨

அன்றைய காலகட்டத்தில் இங்கு தமிழர் குறைவு. அப்போதெல்லாம் இப்போ இருப்பது போல் முகாம் ஒன்றுமில்லை. ஹோட்டல்  அறையும், செலவுக்கு பணமும், nஐனிவாவிற்குள் மட்டுமே சென்றுவர பஸ்சிற்கு மாத ரிக்கற்றும் தருவார்கள்.

அப்போ வேலையில்லாமல் கஸ்ரப்பட்டது மட்டுமல்ல, உதவி செய்வதற்கு எவருமே இல்லாது தவித்து திரிஞ்சனான். அந்த நேரத்தில் தான் எதிர்பாராத விதமாக ¨ஹஸ்லர்¨ என்ற பிரான்ஸ்காரரை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் nஐனிவாவில் றெஸ்ரோறன்ற் ஒன்றின்  உரிமையாளர் என்பதால் எனது பரிதாப நிலையை கேட்டறிந்து தன்னுடைய றெஸ்ரோறன்ரில் வேலை தந்தது மட்டுமல்ல, எனக்கு பிரஞ்ச் மொழியை கற்பதற்கு ஒழுங்குகளும், தங்குவதற்கு தனியாக அறை வசதிகளும் செய்து தந்தார்.

ஏழு வருசம் கஸ்ரப்பட்டு வேலை செய்தபடி கிடைத்த மிகுதி நேரத்தில் பாசையைப் படித்தேன். அதன் பின் ஹஸ்லர் தனது றெஸ்ரோறன்ரை விற்றுவிட்டு பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முடிவெடுத்தார். அந்த நேரத்திலும் அவர்தான் எனக்கு ¨ரவல் ஏஐன்சிக்கு¨ படிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். ¨ஹஸ்லர்¨ என்னை விட்டு பிரியும் நேரத்தில் எனக்கு டிப்ளோமும் கிடைத்ததால் சிறிய இடத்தில் ¨லின்ரா ரவல் ஏஐன்சி¨ என்ற பெயரோடு ஸ்தாபனத்தை ஆரம்பித்தேன். மனைவியுட்பட  மூன்று nஐனிவாவில் வசிக்கும் சுவிஸ் நபர்களும் பணிபுரிகிறார்கள். எனது பிள்ளைகள் இருவரும் தற்போது nஐனிவா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்! என்னை இவ்வளவு  உயரத்திற்கு முன்னேற்றிய ஹஸ்லர் இப்போது உயிரோடு இல்லை.

டேவிட் அங்கிள் அதைச் சொன்னபோது அவரது கண்கள் நெகிழ்ந்து போயிருந்தன. இதயத்தின் ஆழத்திலிருந்து அதைச் சொல்கிறார் என்பதை அவரது குரல் காட்டித் தந்தது.

சிறிது நேரத்தில் என்னைப் பார்த்து புன்னகைத்தவர், ¨நேற்று இரவு என்னோடு காரில் வரும்போது கூறிய சோகம் நிரம்பிய கதை எனக்கு மிகுந்த கவலையைத் தந்தது மட்டுமல்ல, இன்று நீர் இருக்கும் நிலையில் அன்று நான் இருந்தனான்  என்பதால் எனது கதையை கூறவேண்டியதாகி விட்டது.¨

¨சரி உம்முடைய விசயத்திற்கு வருவம். நீர் அடுத்ததாக என்ன செய்யப்போகிறீர்? நீரோ இருப்பது சுவிஸ்சிலை, பத்மகலா இருப்பதோ கனடாவிலை, உம்முடைய உத்தேசம் தான் என்ன?¨

¨அங்கிள் எனக்கு இப்போ தான் ¨அக்சப்ற்¨ பண்ணியிருக்கிறாங்கள் என்று நேற்று வரும்போது சொன்னனான் தானே! எங்கையென்றாலும் முதலில் ஒரு வேலையை தேடி எனக்கிருக்கின்ற கடன் பிரச்சினையை தீர்க்கவேண்டும், பத்மகலா எப்படியும் படிச்சு முடிக்க இரண்டு வருசமெண்டாலும் வேணும், முதலிலை என்ரை கடன் முடியட்டும் அதன் பிறகு யோசிப்பம்.¨

¨அப்ப முரளி என்ற உம்முடைய ¨வில்லங்க¨மானவருக்கு  கனடாவில் பெண் பார்பதாகவும், பத்மகலாவைத்தான்  செய்ய முரளியின் மாமாவின் குடும்பத்தினர் முயற்சிக்கிறார்கள் என்று சொன்னீரல்லவா?¨

¨அங்கிள், அப்படி ஏதாவதென்றால் அதை பத்மகலாதான் தீர்மானிக்கவேண்டும்.  எனக்காக காத்திருப்பேன் என்று சொன்னவள் அவள், எனக்காக காத்திருப்பாள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.¨

¨சந்தோசம் தம்பி உமது நம்பிக்கையை நான் பாராட்டுறன், அது மட்டுமல்ல நான் இப்ப சொல்லப் போவதைக்கேட்டு அதிர்ச்சியடையாதையும். நீர் இங்கு வருவதற்கு முன்பே உமக்கு சூரிச்சில் ஒரு வேலையை ஒழுங்கு பண்ணியிருக்கிறன்.¨

சந்தோசம் மிகுந்த ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன்.

ஓர் சிறிய புன்முறுவலுடன் என்னுடைய சித்தப்பாவின் மகன் டானியல் ¨சூரிச் Nஐhசப் ஸ்ரார்சா¨வுக்கு சிறிது தூரத்திலுள்ள ¨மக்டொனால்சில்¨ வேலையாக இருக்கிறார். வேலைக்கு ஆட்கள் எடுப்பது, சம்பளப் பட்டியல் தயாரிப்பது, வேலை செய்பவர்களுடைய நேர அட்டவணை தயாரிப்பது போன்ற அலுவலக விடயங்களுக்கு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கிறார்.

இன்று காலையில் கதைத்தபோது தற்போது தாங்கள் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகவும், முடிந்தால் நாளை காலை உம்மை கூட்டிக்கொண்டு வரும்படியும், வரும்போது உமது போட்டோவும், வதிவிடவுரிமை பத்திரத்தையும் கொண்டுவரும்படி கூறினார்.

அவர் அப்படி கூறியதும் சந்தோசம் தாங்க முடியாமல் அந்தக் கனிவு முகத்தை இன்னொரு முறை தரிசனம் செய்தபடி, ஹோலின் மூலையில் இருந்த மதாவை மனசுக்குள் வேண்டிக் கொண்டேன்.

¨அப்பா சாப்பாடு ரெடி தம்பியையும் கூட்டிக்கொண்டு வாங்கோ¨ என்று மனைவி குசுனிக்குள் இருந்து குரல் கொடுத்தார், ¨சீலன் எழும்பும் சாப்பிடுவோம்¨ என்று கூறி என்னை டைனிங் ஹோலுக்கு அழைத்துச் சென்றார்.

அனைவரும் ஒன்றாக இருக்கக் கூடிய பெரிய மேசையில் அமர்ந்தோம். 

அன்றைய தினத்தை சந்தோசமாக்கிய ஆண்டவனுக்கு பிரார்த்தனை செய்தபோது! எனக்குமாக சேர்த்து பிரார்த்தனை செய்து முடிந்ததும் சாப்பிடும்படி கூறினார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் அன்பான பரிமாறலுடன் என் வாழ்கையை திசை திருப்பப்போகின்ற டேவிட் அங்கிளின் குடும்பத்தினருடன் இணைந்து சாப்பிட்டது மனசுக்கு பெரு மகிழ்ச்சியாக இருந்தது.

டைனிங் ஹோலை விட்டு ஹோலுக்கு வந்து இருக்கையில் அமர்ந்தேன்.

சிறிது நேரத்தில் புன்னகையோடு வந்த டேவிட் அங்கிள், ¨சீலன் உமக்கு வேறை வேலையொன்றும் இல்லைத்தானே?¨

¨இல்லை அங்கிள் ஏன்? கேக்கிறீங்கள்!¨

¨இல்லை! என்னுடைய பிள்ளைகள், தங்கச்சி எல்லோரும் ¨குறுஸ்லிங்கன்¨ என்ற இடத்திலுள்ள டொல்பின் மீன்களின் கண்காட்சியை பார்க்கப் விரும்புகிறார்கள். அந்த இடம் சூரிச்சிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்த ¨ஹொணிலாண்ட்¨ என்ற பொழுதுபோக்குவதற்கான இடம். உம்மையும் கூட்டிக்கொண்டு போகலாம் என்று விரும்புறோம். எங்களோடு வரவிருப்பமா? திரும்பி வரும்போது றெஸ்ரோறன்ரில் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு வரும் வழியில் உம்மை முகாமில் இறக்கி விடுகிறோம்.¨

அவர்களுடைய விருப்பத்தை என்னால் தட்ட முடியவில்லை.


தொடரும் 19