WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

பகுதி  10-11 எழுத்தாளர் 
திரு.இக.கிருட்ணமூர்த்தி அவர்கள்

16.5.2014 வெள்ளி முதல்  பன்னாட்டு எழுத்தாளர்கள் கூடி எழுதும்  பெருந் தொடர்  அனைத்து பகுதிகளையும்  
பார்வையிட (மேலும்)

விழுதல் என்பது எழுகையே ....  
பகுதி  10  - 11

இத்தொடரை எழுதிய எழுத்தாளர்

பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி அவர்களின் 

அறிமுகம்

- 1976 இல் முதன்முதலாக வட்டுக்கோட்டைத் தொகுதியில் பண்ணாகம் என்னும் இடத்தில் நடைபெற்ற தமிழ் மகாநாட்டில் மாணவ தொண்டனாக பொது சேவையில் அடி எடுத்து வைத்தது.  
- பல பொதுசேவை அமைப்புகளின் நிர்வாகத்திலும் அங்கத்தவராகவும், கலை, நாடகத்துறை இயக்குனராக கடமையாற்றியபோது எழுதி இயக்கிய ’’வேலையாள் வேண்டும்’;’ என்ற நாடகம் பெண்களின் நடிப்பில் யாழில் நாடக போட்டியில் 2 இடம் பெற்றது. யேர்மனியில் 15 சிறு நகைச்சுவை சமூக நாடகங்கள் எழுதி இயக்கியது அத்துடன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்

- வெளிவாரி பல்கலைக்கழக வத்தகமானி பட்டப்படிப்பை கற்றுவந்த காலத்தில் பொது சேவையால் கவரப்பட்டு வெளியேறியமை. யாழ் - ஆணையாளர் திரு.போஜன் தலமையில் சென்யோன்ஸ் அன்புலன் காங்கேசன்துறைப் பிரிவில் 1983இல் ’’கோப்பிறல்’’; பதவியில் கடமையாற்றியது. 1983 இன கலவரத்தால் கொழும்பிலிருந்து கப்பிலில் அழைத்து வரப்பட்ட தமிழர்களை  நடேஸ்வராக் கல்லுரியில் வைத்து பாதுகாப்பாக மருத்துவ உதவிகள் வழங்கியமை. 1988 இல் ’’முதல் உதவிப்’’ பயிற்சி ஆசிரியராக வடமாராட்சியில் கடமையாற்றியது.

-1991 யேர்மனியில் ஐரோப்பிய தமிழ் வாசகர் வட்டம் எனனும் அமைப்பின் இயக்குனராக  இருந்து ஐரோப்பாவில் தமிழ்த்தாகத்தால்  கையெழுத்து. தட்டச்சு ஒருசில கணணி பிரதிகளாக வெளிவந்த 18 சஞ்சிகளை ஒருங்கிணைத்த பெருமையும்  முதன் முதலாக ஓடியோவில் சோலை என்னும் ஒரு சஞ்சிகையை உருவாக்கி வெளியிட்டது இதற்கு திரு.இராசகருணா இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

-யாழ் ’’ஈழமுரசு’’ பத்திரிகையின்செய்தியாளராகவும், யேர்மனியில் எழுத்தாளர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட ’’நமது இலக்கு’’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியராகவும், ’’பண்ணாகம் இணையத்தளம்’’ பிரதம ஆசிரியராகவும், யேர்மனியில் தமிழ்பாடசாலையில் ஆசிரியராகவும் செயற்படுகிறார். மற்றும் சமய சமூக ஆர்வலரும் ஆவார்.

தகவல்கள்
திரு.எலையா முருகதாசன் 
(பண்ணாகம் இணைய சிறப்பு உதவி ஆசிரியர்)

பண்ணாகம் திரு. இக.கிருட்ணமூர்த்தி அவர்கள் பற்றிய 
அறிமுகத்துடன் தொடர் தொடர்கிறது.

தொடர் தொடர்கிறது  10 

எழுதுபவர் பண்ணாகம் இக.கிருட்ணமூர்த்தி


னால் எங்கும் ஒரே இருளாக இருந்தது.இராமலிங்கத்தின் மகள் நிரோஜா தந்தைக்குச் செய்தது பெரிய துரோகம். தான் ஒரு ஆபிரிக்கனை காதலிப்பதை எப்படியாவது தந்தைக்குத் தெரிவித்து அதை  முதலில் தந்தை மறுத்தாலும் அவரைச் சம்மதிக்க வைத்திருக்க வேண்டும். தனக்கு திருமணம் பேசும் போதே வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும். 

கொழும்பிலிருந்து வந்தவரை பலபேருக்கு முன்னால் தலைகுனிய வைக்க  வேண்டிய அவசியமே வந்திருக்காது. 

படித்தவள் அதுவும் இளந்தலைமுறையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்ட நாட்டில் வாழ்பவள். 


ச்சே.... இப்படி நடந்து கொண்டு விட்டாளே..... 


திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு தாலி கட்டிய பிறகு நிரோஜா இப்படிச் செய்திருக்கவே கூடாது. எனக்கோ தவமண்ணைக்கோ முதலில் சொல்லியிருந்தால் இராமலிங்கத்தை சமாதானப்படுததி கொழும்பலிருந்த வந்த மாப்பிள்ளைக்கு நிலைமையை விளங்கப்படுத்தி அந்த மணவறையிலேயே ஆபிரிக்க காதலனுக்கு திருமணத்தை செய்து வைத்திருக்கலாம். நிரோஜா  எல்லோரையும் அவமானப்படுத்தியிருக்கக்கூடாது என்று எண்ணியவாறே என்று நடந்து கொண்டிருந்தான். 


அப்பொழுது ஒரு கார் அவனருகில் வந்து நின்றது.கார் கதவு திறக்கப்பட்டது,அதிலிருந்துஆபிரிக்கக்; காதலனான நிக்சனுடன்  நிரோஜாவும் காரில் இருந்து இறங்குவதைக் கண்ட சீலன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான். 


கார்க் கதவை அப்படியே விட்டு விட்டு அவசர அவசரமா இறங்கிய நிரோஜா சீலனை நோக்கி ஓடிவந்தாள் அவளின் பின்னால் நிக்சனும் வந்தான். அண்ணா அண்ணா எங்கள் வீட்டிலிருந்தா வருகிறீர்கள்? என்று கேட்ட நிரோஜா சீலனை பேசவிடாத தொடர்ந்தாள்.


அப்பா எப்படி இருக்கார்? அண்ணா என்ன சொன்னார்? முரளி பாவம் அவரை நான் எமாற்றிப் போட்டேன்  எல்லம் பயத்தினால் தான் அப்பா அண்ணாவிடம் முதலில் நிக்சனை காதலிப்பதாக  செல்லவில்லை என  மூச்சு விடாமல் செல்லிமுடித்தாள். 


சீலன் என்ன சொல்வது என நினைக்கும் போது......

கலோ பிறதர் என நிக்சன் சீலனுடன் கதைப்பதற்கு வந்தான்!


சீலன் தன்னை சுதாகரித்துக்கொண்டு கலோ என்றான்.


நானும் நிரோஜாவும் ஒரே இடத்தில் வேலை செய்கின்றோம் நான் எஞ்சினியாக இருக்கிறேன். எனது அப்பா சுவீஸ்காரர் அம்மா ஆபிரிக்கா இங்கு தான் இருக்கிறார்கள் நாங்கள் 2வருடமாக காதலிக்கின்றோம்.  


தற்போது அவளுக்கு திருமணம் என்றதும் என்னசெய்வதென்று தெரியாமல் தான் வீட்டைவிட்டு கூட்டிப்போக நினைச்சேன் என ஆங்கிலத்தில் கூறினான்.


சீலனுக்கு அவன் பேச்சு அவன் நல்ல பண்பானவன் என்ற எண்ணம் வந்தது. ஆதனால் எமது தமிழ் கலாசாரத்தை எமது பண்பாட்டை நிக்சனுக்கு எடுத்தக் கூறினான.


நிக்சன்! இப்ப அவள் ஒரு வருடைய மனைவியாகிவிட்டவள் திருமணமாக முதல் இதுபற்றி கதைத்திருந்தால் வேறு முடிவெடுத்திருக்கலாம்.


இப்ப நீங்கள் எடுத்த முடிவு அவசரத்தில் எடுத்த முடிவு இதனால் அந்த குடுமத்பத்தில் எல்லோரது சந்தோசத்தையும் அழித்து விட்டீர்கள். 


இதற்கு என்ன செய்யலாம் சீலன் நீங்கள் தான் நல்ல ஒரு வழி சொல்லுங்கள். என்னால் நிரோசாவை விட்டு பிரியமுடியாது. என்றான் நிக்சன்.


நீங்கள் இருவரும் முதலில் நிரோசா வீட்டுக்கு போய் அங்கு அவர்களுடன் பேசி அவர்களை அவர்களின் சம்மதத்துடனும் இதற்கு நல்ல முடிவெடுக்கலாம் நான் தவத்துடன் கதைக்கிறேன்.


உனது தொலைபேசியை தா என வாங்கி தவத்தாருடன் நடந்தவற்றை கதைத்து இவர்கள இருவரும்; வீடு செல்ல இராமலிங்த்தின் சம்மதத்தை பெற்று அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தான் சீலன்.


அவர்கள் காரில் ஏறிச் செல்வதைபார்த்த சீலனுக்கு தான் ஏதோ சாதித்துவிட்டேன் என்ற பெருமிதத்துடன் பஸ்க்கு காத்திராமல் சந்தோசமாக முகாமை நோக்கி நடக்கலானான்.


முகாம் சென்றவுடன் தவத்தாருடன் அங்குள்ள பெதுத்தொலைபேசில் தொடர்பு கொண்டு இராமலிங்கம் வீட்டு நிலவரம் பற்றிக் கேட்டான்.


தவம் பெருமிதத்துடன்  „நன்றி சீலன்“ என்றார் 


„என்னத்திற்கு நன்றி தவம் அண்ணை“ என்ற சீலனிடம்


„உன்னைமாதிரி தான் மாப்பிளை முரளியும் இங்கு இவர்களை பெரும் சிரப்பட்டு சம்மதிக்கவைத்தார்“ என்றார் தவம்

உன்மையில் கதலின் மகத்தும் தெரிந்தவர் முரளி தனக்கு அவமானம் என எண்ணாது நிரோஜாவுக்காக கதைத்து அவளது அண்ணனையும் சம்ததிக்கவைத்து விட்டான.


இனி என்ன அவர்கள் சேந்து வாழலாம் என மாப்பிளை முரளியும் ஒதுங்கிவிட்டார். .


ஒரு பெரிய பிரச்சினையை தடுத்து நல்லகாரியம் செய்த திருப்தியோடு சீலன் படுக்கையில் சாய்ந்தான் அப்படியே தூங்கிவிட்டான்.

…………………………..

காலை 6.00 மணியாகியது சீலன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.


சிறிலங்கா!  சிறிலங்கா! சிறிலங்கா!  என கூவிக்ககொண்டு விறுமாண்டி என அழைக்கும் ஆபிரிக்கன் ஜக்சன்  ஓடிவந்து சீலனை உலுக்கி எழுப்பினான்.


சீலன் என்னவென்று தெரியாது எழுந்து திருதிரு என விழித்தான்.


விறுமாண்டி தனது காதில் கைவிரல்களை வைத்து தொலைபேசி என கூறினான.


முகாமில் ஒரு பொது தொலைபேசி உள்ளது அதில் சீலனுக்கு சிறிலங்காவில் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. 


அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடிச்சென்று  தொலைபேசியை தூக்கி  நான் சீலன் கதைக்கிறன் என்றான் .


மறுமுனையில் இருந்து ஐயோ! ஐயோ! கடவுளே! என சீலனின் சித்தி பார்வதி பதட்டத்துடன் கத்தி அழுவது கேட்டது.

சீலன் என்ன ஏது என தெரியாது குழம்பியபோதும்  மறுமுனையில் கதைப்பது தனது சித்தி பார்வதி என உறுதிப்படுத்திய போது  பதட்டம் மேலும் அதிகரித்தது. 


பலகாலம் தம்மை எதிரிகள் போல் பொறாமையில் கதைக்காமல் திரிந்தவர் இன்று தொலைபேசி எடுத்து கதைப்பது…. 


யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் யாருக்கும் ஏதும் என பயந்து எண்ண…..


பார்வதி தொடர்ந்து பேசினாள்


„சீலன் உனது மச்சான் குணா பிரான்சில் இறந்தவிட்டாராம்.“ 


„ஐயோ! ஐயோ! எனது மகளின் வாழ்க்கை போய்விட்டுதே“ என தொலைபேசியில் சீலனை பேசவிடாமல் புலம்பிக் கொண்டிருந்தாள் சித்தி பார்வதி


„சித்தி.... சித்தி... எப்ப நடந்ததாம்? யார்? உங்களுக்கு சொன்னது“ என வினாவினான்

„பிரான்சில் இருந்து சின்னத்தம்பியின் மகன் தான் கூறினான்.

 உனது நண்பன் குமரனுக்கு தெரியாதா அவன் உன்னுடன் கதைத்தவனா. „


„அவர்களுக்கு எனது இந்த நம்பர் தெரியாது.“


„அவர்கள் நம்பர் உன்னிடம் இருக்கா? இல்லாவிட்டால் நான்தாறன் எழுது.“


„நம்பர் இல்லை அதனால் தான் கதைக்கில்லை தாருங்கோ“ என்று சொன்ன சீலன்.

பின் அருகில் நின்ற விறுமாண்டியிடம் சைகை மூலம் எழுதுவதற்கு ஏதாவது தரும்படி காட்ட அவனும் தன்னிடமிருந்த பேனையையும் கைதுடைக்கும் பேப்பர் ஒன்றையும் கொடுத்தான்.


„சொல்லுங்கோ சித்தி „என நம்பரை எழுதினான்


„எப்படி என்னடாலும்  பிரான்சில் உன் அக்கா கமலாவுடன் தொடர்பு கொள் அவழுக்கு ஆறுதலாக இரு“ என்றார்.

„ஓம் சித்தி நீங்கள் கவலைப்படாதேங்கோ நான் பார்க்கிறன்“ என்றான்.


„சரி உன்னை நம்பித்தான நிம்மதியாக இருக்கிறன்“ என்று தொலைபேசி தொடர்பை துன்டித்தாள் பார்வதி


சித்தி வீட்டாரால் தனக்கு ஏற்பட்ட இழப்பு, ஏமாற்றங்கள் எல்லாவற்றையம் மறந்து பிரான்சில்  மச்சான் இறந்ததை எண்ணி கவலைப்பட்டவனாக தமக்கைக்கு ஆறுதலாக இருக்கவேண்டும் என அவன் மனம் ஏங்கியவாறு தன் நிலைமைக் கவலைகளை மறந்தான். 


பிரன்சுக்கு எப்படி தொடர்பு கொள்ளலாம் என யோசித்தவாறு தனது அறைக்கு திரும்பினான்.


தொடரும். 11  தொடர்கிறது  எழுதுபவர் பண்ணாகம் இக.கிருட்ணமூர்த்தி

------


விழுதல் என்பது எழுகையே.... 

தொடர் 11  தொடர்கிறது.

எழுதியவர். பண்ணாகம் திரு.இ.க.கிருட்ணமூர்த்தி - யேர்மனி

இத்தொடரை எழுதிய எழுத்தாளர்

பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி அவர்களின் 
அறிமுகம்

- 1976 இல் முதன்முதலாக வட்டுக்கோட்டைத் தொகுதியில் பண்ணாகம் என்னும் இடத்தில் நடைபெற்ற தமிழ் மகாநாட்டில் மாணவ தொண்டனாக பொது சேவையில் அடி எடுத்து வைத்தது.  
- பல பொதுசேவை அமைப்புகளின் நிர்வாகத்திலும் அங்கத்தவராகவும், கலை, நாடகத்துறை இயக்குனராக கடமையாற்றியபோது எழுதி இயக்கிய ’’வேலையாள் வேண்டும்’;’ என்ற நாடகம் பெண்களின் நடிப்பில் யாழில் நாடக போட்டியில் 2 இடம் பெற்றது. யேர்மனியில் 15 சிறு நகைச்சுவை சமூக நாடகங்கள் எழுதி இயக்கியது அத்துடன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்

- வெளிவாரி பல்கலைக்கழக வத்தகமானி பட்டப்படிப்பை கற்றுவந்த காலத்தில் பொது சேவையால் கவரப்பட்டு வெளியேறியமை. யாழ் - ஆணையாளர் திரு.போஜன் தலமையில் சென்யோன்ஸ் அன்புலன் காங்கேசன்துறைப் பிரிவில் 1983இல் ’’கோப்பிறல்’’; பதவியில் கடமையாற்றியது. 1983 இன கலவரத்தால் கொழும்பிலிருந்து கப்பிலில் அழைத்து வரப்பட்ட தமிழர்களை  நடேஸ்வராக் கல்லுரியில் வைத்து பாதுகாப்பாக மருத்துவ உதவிகள் வழங்கியமை. 1988 இல் ’’முதல் உதவிப்’’ பயிற்சி ஆசிரியராக வடமாராட்சியில் கடமையாற்றியது.

-1991 யேர்மனியில் ஐரோப்பிய தமிழ் வாசகர் வட்டம் எனனும் அமைப்பின் இயக்குனராக  இருந்து ஐரோப்பாவில் தமிழ்த்தாகத்தால்  கையெழுத்து. தட்டச்சு ஒருசில கணணி பிரதிகளாக வெளிவந்த 18 சஞ்சிகளை ஒருங்கிணைத்த பெருமையும்  முதன் முதலாக ஓடியோவில் சோலை என்னும் ஒரு சஞ்சிகையை உருவாக்கி வெளியிட்டது இதற்கு திரு.இராசகருணா இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

-யாழ் ’’ஈழமுரசு’’ பத்திரிகையின்செய்தியாளராகவும், யேர்மனியில் எழுத்தாளர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட ’’நமது இலக்கு’’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியராகவும், ’’பண்ணாகம் இணையத்தளம்’’ பிரதம ஆசிரியராகவும், யேர்மனியில் தமிழ்பாடசாலையில் ஆசிரியராகவும் செயற்படுகிறார். மற்றும் சமய சமூக ஆர்வலரும் ஆவார்.

தகவல்கள்
திரு.எலையா முருகதாசன் 
(பண்ணாகம் இணைய சிறப்பு உதவி ஆசிரியர்)

------------------------------------------------------------

பகுதி  11

நேரம் காலை 8 மணியானது அந்த நேரம் தவத்தாரும் இராமலிங்கமும் சீலன் அறைக்குள் நுழைந்தார்கள்.

„வாருங்கோ அண்ணை“ என சீலன் அவர்களை வரவேற்றான்.

என்ன செய்கிறீர் தம்பி என இராமலிங்கம் விசாரித்தபடி  தம்பிக்கு நன்றி செல்லுவம் என்டு இதாலை கடைக்கு போகேக்கை வந்தனாங்கள் 

இதற்கு என்ன நன்றி அண்ணை

தம்பி மகளின்ர இந்த விடயம் மற்றவர்களுக்கு தெரியாமல் உடனடியாக ஒரு முடிவுக்கு வர உங்கட செயல்தான் எனக்கு பெரிசா தெரியுது. 

சீலன் இன்று என்ன செய்யபோகிறாய் என தவத்தார் கேட்டார்.

அண்ணை பிரான்சில்  எனது மச்சான் ஒருவர் இறந்ததாக காலை சித்தி கூறிய கதையை சீலன் சொன்னான்
தம்பி உதுக்கேன் யோசிக்கிறாய் இந்தாரும்  போன் என தனது கைத் தெலைபேசியை நீட்டினார்.

வேண்டாம் அண்ணை இதுக்கு காசு கூடவாக இருக்கும் என்று மறுக்க, „தம்பி காசு ஒன்டும் வேண்டாம் முதலில் நீர் கதைத்து அந்த அலுவலைப்பாரும் இதென்ன பெரியகாசு உன்ர நல்ல மனசுக்கு முன்னால்“ என்றார் இரமலிங்கம் . தவத்தாரும் சைகையில் வாங்கு எனக் காட்டினார்.

சீலன் தயக்கமாக போனை வாங்கி தனத நண்பன் குமரன் நம்பரை அழுத்தியவன் மனம் நண்பனைப்பற்றி சிந்தனையில் தள்ளப்பட்டது. 

குமரன் சீலனின் பாலிய நண்பண் அவனது கவலை ,சந்தோசம் எல்லாவற்றிலும் பங்கெடுத்த உயிர் நண்பன் என்று கூறலாம். அவன் பிரான்சுக்கு தனது குடும்பத்தாருடன் வந்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது.

சீலனுடன் படித்த காலத்தில் படிப்பபை இடைநிறுத்திதான்; குமரன் பிரான்சுக்கு வந்தான். குமரன் வருவதற்கு 8 வருடங்கள் முன்பே மச்சான் குணா பிரான்சில்  வந்து சேர்ந்தார். 

அவர் வந்து சேர்ந்த  சில வருடங்களில் குடிக்கு அடிமையாகியவர்  ஊரில் உள்ளவர்களுடன்  தொடர்பை துண்டித்தார். சித்தியும்  மனைவி கமலாவும்  பல கடிதங்கள் எழுதியும் குணா எந்தவித பதிலும் போடுவதில்லை அவர் இருக்கிறாரா? இல்லையா? 

எனக் கூட தெரியாத நிலையில் தான் கமலா சீலனிடம் தனக்கு நண்பன் குமரனிடம் உதவி செய்யும்படி சீலனை கேட்கும்படி கேட்டாள்.   

என்ன நிலையில் இருக்கிறார் என அறிய நண்பன் குமரனிடம் சீலன் உதவி கேட்டான் நண்பன் கேட்டதற்காக குமரன் பலசிரமங்களுக்கு மத்தியில் பலநாட் தேடலின் பின் ஒரு தமிழர் விழாவில் கண்டு பிடிக்க முடிந்தது. 

அங்கு அவர் தனது கூட்டாளிகளுடன் குடிபோதையில்தான் இருப்பதை அறிந்த குமரன் தனது நண்பன் மூலம் அடையாளம் கண்டுபிடித்தான.; 
மிகுந்த சிரமப்பட்டு அவரை தன்னுடன் அழைத்து அவரை மெல்ல மெல்ல குடிப்பழக்கத்தில் இருந்து மீட்ட பின்புதான் கமலாவும் பிரான்ஸ்  வர முடிந்தது. 

இதற்கெல்லாம் குமரனுக்கு சீலன் பலமுறை நன்றி சொல்லியிப்பான். ஆனால் பிரானஸ் சென்ற கமலா சீலனை முற்றாக மறந்து எதுவித தொடர்பு மற்று பல வருடங்களாகிவிட்டது 

தற்போது மீண்டும் ஒரு உதவிக்காகவே சித்தி சீலனை அனுகியிப்பதும் அதனால் மீண்டும் குமரனிடம் உதவி கேட்பது சீலனுக்கு வெட்கமாக இருந்தது இருந்தாலும் அவனை விட்டால் அவனுக்கு தெரிந்தவர்கள் சிலர் இருந்தாலும் உதவி செய்பவனாக குமரன்தான் இருக்கிறான்.

„என்ன சீலன் யோசனை கதையும்“; என தவத்தார் 

சீலனின் சிந்தனையை கலைத்தார்.

„ஓம் அண்ணை கதைக்கிறன“.; தொடர்பு எண்ணை அழுத்தி குமரனுடன் கதைத்தான்

குமரனிடம் தனது மச்சான் குணா இறந்தையும் கமலாவிற்கு உதவி செய்யும்படியும் கேட்டான். 

குமரன் என்ன குணா இறந்துவிட்டாரா? என ஆச்சரியப்பட்டான். பல வருடம் தெடர்பு இல்லாததால் கமலாவின் புதிய முகவரி பெற்று உதவிக்கு விரைந்தான். 

சீலன் கமலாவிற்கும் தொலைபேசியில் கதைத்து ஆறுதல் கூறி குமரன் உதவிக்கு வருவதாக கூறினான.; அப்போது தான் கமலா தனது எல்லலை மீறிய கவலையை சீலனிடம் கூறி ஓவென அழுதாள்.

குடிக்கு அடிமையாகிய எமது உறவுகள் பல உயிர் பாதுகாப்பு தேடிவந்து இடத்தில் உயிரை வெகு விரைவில் இழந்து விடுகிறார்களே என தனக்குள் நொந்து கொண்டான் சீலன்.

தம்பி நாங்கள் போட்டு வாறம் என இராமலிங்கமும் தவத்தாரும் சென்றார்கள்.

நாட்கள் கிழமைகளாக ,மாதங்களாக ஓடியது
ஒரு நாள் சீலனுக்கு ஒரு கடிதம் வந்ததாக முகாம் பெறுப்பாளர் கொடுத்தார்.

சீலன் ஒரு பல்லலைக்கழக மானவண் என்றதாலும் வயதில் குறைந்தவன் என்பதாலும் அவனது சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாலும் அவனை அகதியாக ஏற்று அனுமதி வழங்கிய கடிதம் வந்திருந்தது அதை அவனே வாசித்து விளங்கி கொள்ளும் அளவுக்கு டொச் மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான்.

தனது வாழ்வில் ஒரு திருப்பம் வந்ததாக சீலன் உணர்ந்தான் தன்னைச் சுற்றியிருந்த பல தடைகள் உடைபட்ட உணர்வுபெற்றான்.

உடனடியாக தனது தாயார் தங்கைக்கு தொலைபேசியில்  அந்த  செய்தியை  சொல்லி இனிக் கவலையில்லையம்மா இங்கே ஒரு நல்ல வேலை வாய்ப்பும் பெறலாம் என்ற நல்லொரு செய்தியும் கேட்டு அந்த தாயின் மனம் குளிரச் செய்தது.

பல நாட்களுக்கு பின் இந்த செய்தியை சொல்லவென தவத்தார் விட்டிற்கு சென்றான் சீலன்
அங்கு தவத்தார் இருக்கவில்லை. 

என்ன செய்வது என யோசித்தவேளை தம்பி சீலன் என இராமலிங்கம் கூப்பிட்டுக் கொண்டு சீலன் அருகில் வந்து,
“யாரைத் தேடுகிறீர?; தவத்தையோ” 

“ஒம் அண்ணை”

“அவர் இப்ப இஞ்சை இல்லத் தம்பி  முரளியுடன் வேறு வீட்டில் இருக்கிறார்கள”; என்னறார்.
“அப்படியா?  எனக்கு தெரியாது”.

“இப்ப மூன்று கிழமைதான் தம்பி”

“சரியண்ணை அவர்கள் விலாசம் இருக்கோ”

இராமலிங்கம் முகவரி சொல்ல சீலன் மிக ஆர்வமாக தவம் வீடு நோக்கி சென்றான். வீட்டை ஓருவாறு கண்டு பிடித்து அழைப்பு மணியை அடித்தான்.

முரளி புன்னகையுடன் கலோ சீலன் என்ன இந்தப்பக்கம்  வாரும் உள்ளளே வாரும் என வரவேற்றான். 

“எப்பிடி முகாம் வாழ்க்கை போகுது அங்கு நல்ல வசதியோ? “

“இல்லை முரளி ஏதோ வந்துவிட்டம் சமாளிக்கதானே வேண்டும.;  அது சரி தவத்தார் எங்கே பேய்விட்டார்?”

“ஏன் எங்களுடன் கதைக்கமாட்டியளோ”  

“அப்படி இல்லை முரளி” 

“அவர் ஓரு சின்ன வேலை ஒன்று செய்கிறார் இப்ப வருவார்” என்றான் முரளி

“அது சரி முரளி இனி என்ன செய்வதாக ஐடியா”

கனடா போவம் என்று யோசிக்கிறன் அங்கு எனது தம்பி ஒருவன் இருக்கிறான். அங்கு வரும்படி கேட்கிறான்  நானும் அது நல்லது என நினைக்கிறன். 

“அது நல்லதுதான் இங்கே இருந்தால் அந்த திருமண நினைவு உங்களை டிஸ்ரொப் செய்யும் தானே அங்கு சென்றால் காலப் போக்கில் மறந்துவிடலாம”;.

“சீலன் என்னுடைய தம்பி சொன்னான் உன்னுடைய  பத்மகலா இப்ப கனடாவில்தான் இருக்கிறதாக என்னைப் பற்றி விசாரித்து தம்பியிடம் கேட்டு எனது நம்பர் பெற்று என்னுடன் சென்ற கிழமை கதைத்தவ அப்பொழுது  உங்களை பற்றி நான் சொன்னேன் 

ஒரு நிமிடம் அப்படியே கதைக்காமல் நின்றவா”.

“ம்………………………………”

“என்ன நான் கதைக்கிறன் எந்தவித றீஅக்சனும் இல்லாமல் இருக்கிறீங்கள”;.

“நான் என் சொல்ல…. விழுதல் என்பது…. மனித இயல்பு”  அதே போல் எழுகையும் மனித இயல்பு

“கலா கனடா எப்படி வந்தவ என தெரியாது தானே?”

சீலன் எதுவும் பேச விரும்பாதவனாக மௌனமாக இருந்தான். 

அது ஒரு பெரிய கதையாம். 

“தவம் அண்ணை இப்ப வருவாரோ” கதையை திசை திருப்பினான் சீலன்.

“இப்ப  முகாம்  நம்பரில் உங்களுடன் கதைக்கலாம் தானே?”

“அதே நம்பர்தான் ஆனால் சிலவேளை மிக சினமாக இருக்கும் மற்றைய நாட்டுக்காரர் எப்பவும் போன் தான் பிறீயா விடாதுகள்.” 

“அம்மா பலதடவை போன் எடுத்து என்னுடன் கதைக்க முடியவில்லையாம். ஆதனால் நான் எடுத்துதான் கதைக்கிறனான”; என்றான்.

அப்போது தவம் சில கடைச் சாமான்களுடன் உள்ளே நுழைந்தார்.

“தம்பி சீலன் எப்படி வந்தாய் இங்கு  நான் உனக்கு வீடுமாறியதை சொல்லலாம் என்னால் இந்த வேலையால் முடியவில்லை மன்னித்துக் கொள்” என்றார்.

“அதொல்லாம் என்ன மன்னிப்பு கேட்கிறது அங்கே போய் இராமலிங்கம் சொல்லி இங்க வந்தனான்”

“என்னவிசயம்”

“அண்ணை எனக்கு அக்சப்பண்ணிட்டாங்கள்(அகதி அனுமதி கிடைத்தது ) நேற்று கடிதம் வந்தது”.

“ஓ…! இது பெரிய விசயம் தம்பி உம்மட நல்ல மனசுக்க எல்லாம் நல்லபடியாக நடக்கும”; என சீலனுக்கு வாழ்த்துக்கூறினார்.

“அப்ப இன்டைக்கு இங்கு புட்டவித்து பாட்டி கொண்டாடுவம்”  என்று முரளி கூறினான.;
“என்ன பார்ட்டியோ?“

„அதுதான் தம்பி ரீ பாட்டி நான் புட்டவித்து ஒரு கோழிக்குழம்பு வைக்கிறன் சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேனும்“ என்றார் தவத்தார்.

„சரியண்ணை உங்கள் விருப்பம்” என்றான் சீலன்.

என்ன ஒரு நல்ல மனசு என் சந்தேசத்தை தங்கள் சந்தோசமாக நினைக்கிறார்கள் என மனதுக்குள் பெருமைப்பட்டான் சீலன்.
--------------
மாலை 5 மணி முகாம் முன்பகுதியில் சீலன் தான் இன்று தமிழ்கடையில் வாங்கிவந்த குமுதம் புத்தகத்தை வாசித்துக்ககொண்டிருந்தான்   மற்றவர்கள் தங்கள் தங்கள் மொழியில் சத்தமாக கதைத்தக்கொண்டிருந்தார்கள்.

முகாம் பொதுத் தொலைபேசி அலறியது ஆனால் சீலன் காதில் அது ஒரு நல்ல இசை போன்று கேட்டது திரும்பிப்பார்த்தான்.

விளையாடிக் கொண்டிருந்த ஒரு அரேபிய சிறுமி தொலைபேசியை எடுத்து கலோ என்றாள் அவளுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் மறுமுனையில் கதைத்தது விளங்கியது உடனே சீலன் பக்கம் திரும்பி  
கலோ சிறீலங்கா கலோ சிறீலங்கா என்றாள்

அங்கு சீலனைத்தவிர சிறீலங்கவை சேர்ந்த யாரும் இல்லாததால் தனக்குத்தான் என சீலன் எழுந்து சென்று போனைப் பெற்று காதில் வைத்து கலோ என்றான்.

மறுமுனையில்  “மிஸ்டர் சீலன் பிளீஸ்” ஒரு பெண்குரல்

யாராக இருக்கும் என சீலன் மனம் ஏங்க 

„நான் சீலன்தான் நீங்கள்“

மௌனம் ஆனால் பெருமூச்சு கேட்டது. „கலோ யாரது நீங்கள்.“

மீண்டும் மௌனம்….

„கலோ யாரது சொல்லுங்க இல்லை.... நான் வைக்கட்டுமா“

„இல்லை இல்லை“ என பதற்றத்துடன் ஒரு பெண் குரல்!

„நான்….. நான் … உங்கள் பத்மகலா கனடாவில் இருந்து கதைக்கிறன்“;

ஓரு கணம் அதிர்ச்சியில் உறைந்தான் சீலன்!!!!

தொடரும்…  பகுதி 12  

(பகுதி 12 எழுதுபவர்  திரு.குரு. அரவிந்தன்  கனடா)

-----------------------------------