தொடர் தொடர்கிறது 10
எழுதுபவர் பண்ணாகம் இக.கிருட்ணமூர்த்தி
ஆனால் எங்கும் ஒரே இருளாக இருந்தது.இராமலிங்கத்தின் மகள் நிரோஜா தந்தைக்குச் செய்தது பெரிய துரோகம். தான் ஒரு ஆபிரிக்கனை காதலிப்பதை எப்படியாவது தந்தைக்குத் தெரிவித்து அதை முதலில் தந்தை மறுத்தாலும் அவரைச் சம்மதிக்க வைத்திருக்க வேண்டும். தனக்கு திருமணம் பேசும் போதே வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும்.
கொழும்பிலிருந்து வந்தவரை பலபேருக்கு முன்னால் தலைகுனிய வைக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது.
படித்தவள் அதுவும் இளந்தலைமுறையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்ட நாட்டில் வாழ்பவள்.
ச்சே.... இப்படி நடந்து கொண்டு விட்டாளே.....
திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு தாலி கட்டிய பிறகு நிரோஜா இப்படிச் செய்திருக்கவே கூடாது. எனக்கோ தவமண்ணைக்கோ முதலில் சொல்லியிருந்தால் இராமலிங்கத்தை சமாதானப்படுததி கொழும்பலிருந்த வந்த மாப்பிள்ளைக்கு நிலைமையை விளங்கப்படுத்தி அந்த மணவறையிலேயே ஆபிரிக்க காதலனுக்கு திருமணத்தை செய்து வைத்திருக்கலாம். நிரோஜா எல்லோரையும் அவமானப்படுத்தியிருக்கக்கூடாது என்று எண்ணியவாறே என்று நடந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது ஒரு கார் அவனருகில் வந்து நின்றது.கார் கதவு திறக்கப்பட்டது,அதிலிருந்துஆபிரிக்கக்; காதலனான நிக்சனுடன் நிரோஜாவும் காரில் இருந்து இறங்குவதைக் கண்ட சீலன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
கார்க் கதவை அப்படியே விட்டு விட்டு அவசர அவசரமா இறங்கிய நிரோஜா சீலனை நோக்கி ஓடிவந்தாள் அவளின் பின்னால் நிக்சனும் வந்தான். அண்ணா அண்ணா எங்கள் வீட்டிலிருந்தா வருகிறீர்கள்? என்று கேட்ட நிரோஜா சீலனை பேசவிடாத தொடர்ந்தாள்.
அப்பா எப்படி இருக்கார்? அண்ணா என்ன சொன்னார்? முரளி பாவம் அவரை நான் எமாற்றிப் போட்டேன் எல்லம் பயத்தினால் தான் அப்பா அண்ணாவிடம் முதலில் நிக்சனை காதலிப்பதாக செல்லவில்லை என மூச்சு விடாமல் செல்லிமுடித்தாள்.
சீலன் என்ன சொல்வது என நினைக்கும் போது......
கலோ பிறதர் என நிக்சன் சீலனுடன் கதைப்பதற்கு வந்தான்!
சீலன் தன்னை சுதாகரித்துக்கொண்டு கலோ என்றான்.
நானும் நிரோஜாவும் ஒரே இடத்தில் வேலை செய்கின்றோம் நான் எஞ்சினியாக இருக்கிறேன். எனது அப்பா சுவீஸ்காரர் அம்மா ஆபிரிக்கா இங்கு தான் இருக்கிறார்கள் நாங்கள் 2வருடமாக காதலிக்கின்றோம்.
தற்போது அவளுக்கு திருமணம் என்றதும் என்னசெய்வதென்று தெரியாமல் தான் வீட்டைவிட்டு கூட்டிப்போக நினைச்சேன் என ஆங்கிலத்தில் கூறினான்.
சீலனுக்கு அவன் பேச்சு அவன் நல்ல பண்பானவன் என்ற எண்ணம் வந்தது. ஆதனால் எமது தமிழ் கலாசாரத்தை எமது பண்பாட்டை நிக்சனுக்கு எடுத்தக் கூறினான.
நிக்சன்! இப்ப அவள் ஒரு வருடைய மனைவியாகிவிட்டவள் திருமணமாக முதல் இதுபற்றி கதைத்திருந்தால் வேறு முடிவெடுத்திருக்கலாம்.
இப்ப நீங்கள் எடுத்த முடிவு அவசரத்தில் எடுத்த முடிவு இதனால் அந்த குடுமத்பத்தில் எல்லோரது சந்தோசத்தையும் அழித்து விட்டீர்கள்.
இதற்கு என்ன செய்யலாம் சீலன் நீங்கள் தான் நல்ல ஒரு வழி சொல்லுங்கள். என்னால் நிரோசாவை விட்டு பிரியமுடியாது. என்றான் நிக்சன்.
நீங்கள் இருவரும் முதலில் நிரோசா வீட்டுக்கு போய் அங்கு அவர்களுடன் பேசி அவர்களை அவர்களின் சம்மதத்துடனும் இதற்கு நல்ல முடிவெடுக்கலாம் நான் தவத்துடன் கதைக்கிறேன்.
உனது தொலைபேசியை தா என வாங்கி தவத்தாருடன் நடந்தவற்றை கதைத்து இவர்கள இருவரும்; வீடு செல்ல இராமலிங்த்தின் சம்மதத்தை பெற்று அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தான் சீலன்.
அவர்கள் காரில் ஏறிச் செல்வதைபார்த்த சீலனுக்கு தான் ஏதோ சாதித்துவிட்டேன் என்ற பெருமிதத்துடன் பஸ்க்கு காத்திராமல் சந்தோசமாக முகாமை நோக்கி நடக்கலானான்.
முகாம் சென்றவுடன் தவத்தாருடன் அங்குள்ள பெதுத்தொலைபேசில் தொடர்பு கொண்டு இராமலிங்கம் வீட்டு நிலவரம் பற்றிக் கேட்டான்.
தவம் பெருமிதத்துடன் „நன்றி சீலன்“ என்றார்
„என்னத்திற்கு நன்றி தவம் அண்ணை“ என்ற சீலனிடம்
„உன்னைமாதிரி தான் மாப்பிளை முரளியும் இங்கு இவர்களை பெரும் சிரப்பட்டு சம்மதிக்கவைத்தார்“ என்றார் தவம்
உன்மையில் கதலின் மகத்தும் தெரிந்தவர் முரளி தனக்கு அவமானம் என எண்ணாது நிரோஜாவுக்காக கதைத்து அவளது அண்ணனையும் சம்ததிக்கவைத்து விட்டான.
இனி என்ன அவர்கள் சேந்து வாழலாம் என மாப்பிளை முரளியும் ஒதுங்கிவிட்டார். .
ஒரு பெரிய பிரச்சினையை தடுத்து நல்லகாரியம் செய்த திருப்தியோடு சீலன் படுக்கையில் சாய்ந்தான் அப்படியே தூங்கிவிட்டான்.
…………………………..
காலை 6.00 மணியாகியது சீலன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
சிறிலங்கா! சிறிலங்கா! சிறிலங்கா! என கூவிக்ககொண்டு விறுமாண்டி என அழைக்கும் ஆபிரிக்கன் ஜக்சன் ஓடிவந்து சீலனை உலுக்கி எழுப்பினான்.
சீலன் என்னவென்று தெரியாது எழுந்து திருதிரு என விழித்தான்.
விறுமாண்டி தனது காதில் கைவிரல்களை வைத்து தொலைபேசி என கூறினான.
முகாமில் ஒரு பொது தொலைபேசி உள்ளது அதில் சீலனுக்கு சிறிலங்காவில் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது.
அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடிச்சென்று தொலைபேசியை தூக்கி நான் சீலன் கதைக்கிறன் என்றான் .
மறுமுனையில் இருந்து ஐயோ! ஐயோ! கடவுளே! என சீலனின் சித்தி பார்வதி பதட்டத்துடன் கத்தி அழுவது கேட்டது.
சீலன் என்ன ஏது என தெரியாது குழம்பியபோதும் மறுமுனையில் கதைப்பது தனது சித்தி பார்வதி என உறுதிப்படுத்திய போது பதட்டம் மேலும் அதிகரித்தது.
பலகாலம் தம்மை எதிரிகள் போல் பொறாமையில் கதைக்காமல் திரிந்தவர் இன்று தொலைபேசி எடுத்து கதைப்பது….
யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் யாருக்கும் ஏதும் என பயந்து எண்ண…..
பார்வதி தொடர்ந்து பேசினாள்
„சீலன் உனது மச்சான் குணா பிரான்சில் இறந்தவிட்டாராம்.“
„ஐயோ! ஐயோ! எனது மகளின் வாழ்க்கை போய்விட்டுதே“ என தொலைபேசியில் சீலனை பேசவிடாமல் புலம்பிக் கொண்டிருந்தாள் சித்தி பார்வதி
„சித்தி.... சித்தி... எப்ப நடந்ததாம்? யார்? உங்களுக்கு சொன்னது“ என வினாவினான்
„பிரான்சில் இருந்து சின்னத்தம்பியின் மகன் தான் கூறினான்.
உனது நண்பன் குமரனுக்கு தெரியாதா அவன் உன்னுடன் கதைத்தவனா. „
„அவர்களுக்கு எனது இந்த நம்பர் தெரியாது.“
„அவர்கள் நம்பர் உன்னிடம் இருக்கா? இல்லாவிட்டால் நான்தாறன் எழுது.“
„நம்பர் இல்லை அதனால் தான் கதைக்கில்லை தாருங்கோ“ என்று சொன்ன சீலன்.
பின் அருகில் நின்ற விறுமாண்டியிடம் சைகை மூலம் எழுதுவதற்கு ஏதாவது தரும்படி காட்ட அவனும் தன்னிடமிருந்த பேனையையும் கைதுடைக்கும் பேப்பர் ஒன்றையும் கொடுத்தான்.
„சொல்லுங்கோ சித்தி „என நம்பரை எழுதினான்
„எப்படி என்னடாலும் பிரான்சில் உன் அக்கா கமலாவுடன் தொடர்பு கொள் அவழுக்கு ஆறுதலாக இரு“ என்றார்.
„ஓம் சித்தி நீங்கள் கவலைப்படாதேங்கோ நான் பார்க்கிறன்“ என்றான்.
„சரி உன்னை நம்பித்தான நிம்மதியாக இருக்கிறன்“ என்று தொலைபேசி தொடர்பை துன்டித்தாள் பார்வதி
சித்தி வீட்டாரால் தனக்கு ஏற்பட்ட இழப்பு, ஏமாற்றங்கள் எல்லாவற்றையம் மறந்து பிரான்சில் மச்சான் இறந்ததை எண்ணி கவலைப்பட்டவனாக தமக்கைக்கு ஆறுதலாக இருக்கவேண்டும் என அவன் மனம் ஏங்கியவாறு தன் நிலைமைக் கவலைகளை மறந்தான்.
பிரன்சுக்கு எப்படி தொடர்பு கொள்ளலாம் என யோசித்தவாறு தனது அறைக்கு திரும்பினான்.
தொடரும். 11 தொடர்கிறது எழுதுபவர் பண்ணாகம் இக.கிருட்ணமூர்த்தி
------